உடுமலை, ஆக.21- கல்வியை வணிகமய மாக்கும் புதிய கல்வி கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருச்சி யில் ‘கல்வி உரிமை பாது காப்பு மாநாடு’ நடைபெற உள்ளது. இதுகுறித்த பிரச் சாரத்தை தமுஎகச சார்பில் உடுமலை பகுதியில் புத னன்று மேற்கொண்டனர். இந்த பிரச்சார இயக் கத்தை ஆசிரியர் செல்ல துரை துவக்கி வைத்தார். ஆசிரியர் சி.ஜெயபிரகாசம், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத் தின் உடுமலை கிளை நிர் வாகிகள் தோழன் ராஜா, சுதா சுப்பிரமணியம், மக்கள் பாடகர் துரையரசன், லால், சின்னசாமி, ஆதிதமிழர் பேரவையின் ஈழவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரச்சாரம் உடுமலை வட்டம், சின்ன வீரம்பட்டி பகுதியில் துவங்கி சிவசக்தி காலனி, ஏரிப்பாளையம் மற்றும் உடுமலை நகர் பகுதிகளில் நடைபெற்றது.