tamilnadu

சாக்கடை வசதி கோரி சிபிஎம் மனு

திருப்பூர், ஜூலை 25 - திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் சாக்கடை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையம் பகுதிக்குட்பட்ட காமாட்சியம்மன் கோவி லில் இருந்து ராமகிருஷ்ணா பள்ளி வரையிலும், அம்மன் மகாலில் இருந்து அண்ணாநகர் பகுதி வரையிலும் சாக்கடை வசதி  இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.

தற்போது, மழைக்காலமாக இருப்ப தால் சாக்கடை நீர் சாலையில் தேங்கும் அவல நிலை உரு வாகியுள்ளதால் அப்பகுதியில் வசிப்போருக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே, போர்க்கால அடிப்படையில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதில், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப் பிரமணி, பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.