உடுமலை, ஜூன் 11- குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று வல்லக்குண்டாபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உடுமலை ஒன்றியம், கொடிங்கியம் ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்க ளுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக் கப்படவில்லை. இதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூன் றாண்டாக நடத்தாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். குடிநீர் முறையாக விநியோகம் செய் யப்படுவதில்லை. இதனால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று குடிநீர் பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. வல்லக்குண்டாபுரத்தில் தெற்கு பகுதியிலுள்ள விவசாய விளை நிலங்களில் சட்ட விரோதமாக புதைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வல்ல குண்டாபுரம் கிளை செயலாளர் வேலு சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் பாலதண்டபாணி, பரமசிவம், ஜெகதீசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.