திருப்பூர், ஜூலை 15- இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்ட மாண வர்களிடம் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாண வர்களின் பெற்றோர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்பினர் கோரிக்கைள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு, ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூரில் உள்ள கொங்கு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இலவச கட்டாய கல்வி (ஆர்டிஇ) சட்டத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாண வர்களிடம் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்த நிர்பந்தித்து வருகிறது. மேலும், இச்சட்டத்தின்கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத் தகங்களை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து வருகிறது. ஆகவே, சம்மந்தப் பட்ட கல்வி நிறுவனத்தின் நடவ டிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற் றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தனியார் கல்லூரி அராஜகம்
காங்கயம் வட்டம், திட்டுப்பாறை யில் உள்ள சேரன் மகளிர் கல்லூரி மற்றும் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஊழியர்களை திடீரென்று எவ்வித அறிவிப்பும் இன்றி கல்லூரி நிர்வாகம் பணியிலிருந்து விடுவித்து உள்ளது. மேலும் சில ஊழியர்கள் சொந்த காரணங்களுக்காக பணியில் இருந்து விலகியுள்ளனர். இச்சூழலில் கல்லூரி நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதுமட்டுமின்றி அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை பெற் றுக்கொண்டு திரும்ப வழங்க மறுத்து வருகிறது. ஆகவே, தங்களுடைய சம்பள பாக்கியும், அசல் கல்வி சான்றி தழ்களையும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத் தரக்கோரி பாதிக் கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.
மின்வசதி - வீட்டுமனை கோரி
திருப்பூர் தெற்கு பகுதிக்கு உட் பட்ட காஞ்சி நகர், திருவேங்கடம் நகர் (34 வார்டு) வசித்து வரும் குடியி ருப்புகளுக்கு மின் இணைப்பு வழங் கப்படாததன் காரணமாக அப்பகுதி யில் வசிப்பவர்கள் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். ஆகவே, தங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதேபோல், உடுமலைப்பேட்டை அடுத்த ச.வல்லகொன்டபுதூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப் பவர்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி அப்பகுதியினர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர்
அடிப்படை வசதிகள் கோரி
திருப்பூர் விஜயாபுரம் தெற்கு வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் விஜயாபுரம் தெற்கு வீதியில் பொதுப்பணித்துறை சார்பாக 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க முடிவு செய்து, அதற்காக மண் பரிசோதனை செய்ய எடுத்துச் சென்றுள்ளனர். அதேநேரம், நீர் தொட்டி அமையும் இடம் பழைய மண் சுவர்களாலான ஓட்டு வீடுகள் நிறைந்த பகுதியாகும். இந்நிலையில் குடிநீர் தொட்டி அமைக்கும் இடம் பாறைகள் உள்ள பகுதியாக உள்ளதால் பாறை கள் அகற்றும் பணி நடைபெற்று வரு கிறது. இந்த பாறைகளை அகற்ற கனரக இயந்திரங்கள், வெடிகளை பயன்படுத்துவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்புக்குள் ளாக வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்க இருக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், நாச்சிபாளை யம் கொடுவாய் ரோடு, செந்தில் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியி ருப்போர்களுக்குத் தேவையான கான்கிரீட் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதி களும் இல்லாத காரணமாக, அவ திக்குள்ளாகி வருகின்றோம். இது சம்பந்தமாக துறை ரீதியான பல் வேறு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு மனு கொடுத்தோம். இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக தலையிட்டு தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலி யுறுத்தி செந்தில் நகர் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.