tamilnadu

img

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உத்தரவை ரத்து செய்திடுக மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், செப். 21 – தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண் டும் என்று இந்திய மாணவர் சங்கத் தின் பல்லடம் தாலுகா மாநாடு வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் பல்லடம் கல்வி மாவட்ட அளவி லான மாநாடு சனிக்கிழமை பல் லடத்தில் நடைபெற்றது. இம்மா நாட்டுக்கு மாணவர் சங்க திருப் பூர் மாவட்டத் துணைத் தலைவர் பிரவீன்குமார் தலைமை தாங்கி னார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் துணைச் செய லாளர் உமாசங்கர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.  இம்மாநாட்டில் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது. இலவச பேருந்து பயண அட்டை போன்ற மாணவர் நலத்திட்டங் களை கல்வி ஆண்டு தொடக்கத் திலேயே வழங்க வேண்டும். நிலு வையில் உள்ள எஸ்சி., எஸ்டி,, ஓபிசி கல்வி உதவித் தொகையை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இம்மாநாட்டில்  தாலுகா தலை வராக ரகு, செயலாளராக நித்தீஷ், துணைத் தலைவர்களாக விஜய், நிவாஸ், துணைச் செயலாளர்க ளாக துளசிமணி, மோகன்ராஜ்  ஆகியோர் நிர்வாகிகளாகவும், 15 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது நிறைவுரை ஆற் றினார். இம்மாநாட்டில் பல்லடம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.