உடுமலை, அக். 15- உடுமலை கிளை நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த தின விழா வாசிப்பு தினமாக கொண்டாடப் பட்டது . உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 ல் அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினவிழா வாசிப்பு தினமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற நிகழ் விற்கு நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி.அய்யப்பன், அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். நூலகர் வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவக்குமார், உண்டு உறைவிடப் பள்ளி காப்பாளர் புருசோத்தமன், பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சிவக்குமார் மாண வர்களுக்கு அப்துல் கலாம் குறித்த கலந்துரையாடல் நடத்தி புத்தகங்களை வழங்கினார்.