tamilnadu

img

திருப்பூரில் கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற நில வருவாய் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

திருப்பூர், மார்ச் 4– திருப்பூரில் கிராவல் மண் கடத்தலைத் தடுக்க முயன்ற நில வருவாய் ஆய்வாளரை கடத்தல்காரர் கள் கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ளனர். இது பற்றி காவல் துறை யினர் தெரிவித்ததாவது: திருப்பூர் நல்லூர் நில வரு வாய் ஆய்வாளராக பணி யாற்றி வருபவர் சிவசக்தி. இவருக்கு காங்கேயம் சாலை நாச்சிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராவல் மண் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பிடித்தார். இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த லாரி உரிமையாளரான, கொடுவாய் பகுதி யைச் சேர்ந்த  அப்புக்குட்டி மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் சிவசக்தியைத் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது காலில் காரை ஏற்றி கொல்ல முயன்றதாகத் தெரிகிறது. இது குறித்து சிவசக்தி தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை செய்யும் நோக்கில் காலில் காரை ஏற்றியதாக அப்புக்குட்டி உள்ளிட்டோர் மீது நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிவசக்தி மீது காரை  ஏற்றி கொல்ல முயற்சித்த லாரி உரிமையாளர் அப்புக் குட்டி, லாரி ஓட்டுனர் சதீஷ்குமார் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் தப்பிச் சென்ற அப்புகுட்டியின் மகன், மற்றொரு லாரி ஓட்டுனர் இளங்கோ  ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.