உடுமலை, டிச. 15- சைனிக் பள்ளியில் 58வது தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அமராவதி நகர் சைனிக் பள்ளியில் டிச.12, 13ல் நடைபெற்ற தடகளப் போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்களுக்கு 100,200,400,800,1500 மற்றும் 3000 மீட்டர் ஓட்டம், 400 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மற்றும் 400 மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. சீனியர் பிரிவு மாணவர்களுக்கு 100,200,400,800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டம், 100 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு, தட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றன. ஜீனியர் பிரி வில் இதேபோல் போட்டிகள் நடைபெற்றன. மேலும் 300 மீட்டர் தூரத்தை நிலத்திலும், தண்ணீரும் ஓடிக் கடக்கும் பந்தயங்களும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்காக குண்டு எறிதல், 100,200 மீட்டர் ஒட்டப்பந்தயமும், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் முதல்வர் சிதானா சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இவ்விழா வில் நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் அமித் குர்குரே, துணை முதல்வர் நிர்பேந்தர் சிங், மூத்த ஆசிரியர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.