tamilnadu

மாணவர்களுக்கு தடகளப் போட்டிகள்

 புதுக்கோட்டை, பிப்.27- சர்வதேச அளவில் பதக்கம் பெறும் திறனாய்வா ளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் நடத்தப்பட்ட உடற்திறன் தேர்வுகளில் தேர்வு செய்யப் பட்ட மாணவ, மாணவிக ளுக்கு புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வியாழக்கிழமை யன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதில் 100, 200 மீ ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டி கள் மாணவ, மாணவிகளு க்கு தனித்தனியாக நடை பெற்றன. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவ லர் மாலதி, உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் முதல் 2 இடங்களை பெறும் மாணவ, மாண விகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.