உடுமலை, ஜன. 26- உடுமலை ஊராட்சி ஒன்றிய இராகல்பாவி துவக்கப்பள்ளியில் 71 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டா டப்பட்டது. இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழி யன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி வரவேற்றார். இராகல்பாவி கூட்டுறவு சங்க தலைவர் விஜயராஜ், உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர் ராசாத்தி, ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இளைஞர் நற்பணி மன்றம் உறுப்பினர் சின்ன துரை மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கள் வாழ்த்துரை வழங்கி னர். இதனைத் தொடர்ந்து ஊராட்சியை பசுமையான ஊராட்சியாக மாற்ற பள் ளிக்கு அருகே உள்ள இடத் தில் மரக்கன்றுகள் நடப் பட்டது. இவற்றை சிறப் பாக பராமரிப்பவர்களுக்கு அடுத்த வருடம் தங்க காசு கள் பரிசாக வழங்கப்படும் என ஊராட்சி மன்ற தலை வர் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் பேச்சு, கவிதை, நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இறுதியாக உதவி ஆசிரியர் கண்ண பிரான் நன்றி கூறினார்.