tamilnadu

img

நெல்லை மாவட்ட வாலிபர் சங்க பொருளாளர் அசோக் படுகொலை: சாதி வெறியர்களைக் கண்டித்து கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 13 - நெல்லை மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கப் பொரு ளாளர் அசோக் படுகொலை செய் யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்,  இதற்குக் காரணமான சாதிவெறி யர்களைக்  கைது செய்ய வலியுறுத் தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மற்றும்  உடுமலையில்  கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை திருப்பூர் தியாகி குமரன் நினைவுப் பூங்கா முன்பாக நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பா.ஞான சேகரன் தலைமை வகித்தார். இதில் நெல்லை மாவட்டத்தில் வாலிபர்  சங்கத்தின் துடிப்புமிக்கப் போராளி யாக செயல்பட்ட, அம்மாவட்ட சங்கப் பொருளாளர் இளம் தோழர் அசோக்கை சாதிவெறியர்கள் படு கொலை செய்ததைக் கண்டித்து ஆவேச முழக்கம் எழுப்பப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சாதி வெறி சக்திகளை முறியடித்து சமூக  நல்லிணக்கத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாலிபர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகி யோர் உரையாற்றினர். இதில் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர் வாகிகள், ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உடுமலை
இதேபோல், உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உடு மலை நகர செயலாளர் சுரேஷ்  தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட பொருளாளர் ஓம்பிரகாஷ்,  ஒன்றிய செயலாளர் லோகேஸ் வரன் மற்றும் அய்யனார், கருப்பு சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு படுகொலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.