tamilnadu

திருப்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமனம்

திருப்பூர், மார்ச் 25 – திருப்பூர் மாவட்டத்தில் செவ் வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்திருக்கும் நிலையில் ஒவ்வொரு வட்டத்துக்கும் மாவட்ட துணை ஆட்சியர் நிலையிலான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு கண்கா ணிப்புப் பணி மேற்கொள்வர் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் கூறி யுள்ளார். இது தொடர்பாக (மார்ச் 24) செவ்வாயன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்களைக் காத்திடும் பொருட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் வெளி யிடப்பட்டுள்ள அரசாணை எண். 152ன்படி 144 தடை உத்தரவு பிறப் பிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப் படையில் திருப்பூர் மாவட்டம் முழு மைக்கும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் குற்ற விசா ரணை முறைச்  சட்டப்பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இத்தடைக் காலத்தில் முழுமையாக திருப்பூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டிருக்கும். தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறிய மளிகைக் கடை கள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், அம்மா உணவங்கள், மருந்தகங் கள், ஆவின் பால் விற்பனை நிலை யங்கள், அரசு நியாய விலை கடை கள், அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகள் தவிர மற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் இயங் காது. சில அத்தியாவசிய துறைகள் தவிர இதர அனைத்து அரசு அலு வலகங்களும், பொதுத்துறை நிறு வனங்களும் இயங்காது. அத்தியா வசிய பண்டங்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் ஏற்றிச் செல் லும் வாகனங்கள், அவசர ஊர்தி கள் (ஆம்புலன்ஸ்) தவிர இதர அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஒப் பந்த வாகனங்கள், வாடகைக் கார் கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கம் தடை செய் யப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், எரிவாயு விநியோக மையங்கள், விவசாய விளைபொருட்கள் விற் பனை மையங்கள், கால்நடை தீவன விற்பனை கடைகள் வழக் கம் போல் இயங்கும். உணவகங் களில்  உணவருந்த அனுமதி இல்லை, பார்சல் வாங்கி செல்ல லாம். தேநீர் கடைகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு அனுமதி யில்லை.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடையில்லை. மின்சார விநியோகம், குடிநீர் விநி யோகம், தபால் மற்றும் தொலை பேசி சேவைகள், குடிநீர் கேன் விநியோகம் ஆகியவை வழக்கம் போல் செயல்படும். மார்ச் 16 ஆம் தேதிக்கு முன்னர் நிச்சயிக்கப் பட்ட திருமணங்கள் மட்டும் அதி கபட்சம் 30 பங்கேற்பாளர்களு டன் நடத்திட திருமண மண்டபங்க ளுக்குத் தடையில்லை. அதற்கு மேல் மக்கள் பங்கேற்கக் கூடாது.

வட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலர்
கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுத்திடும் பொருட்டு மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் ஒவ்வொரு வட்டத் திற்கும் சிறப்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் அனைத்து துறைகளையும் ஒருங்கி ணைத்து நோய் தொற்று பரவாத படி நடவடிக்கைகள் மேற்கொள் வது உட்பட அனைத்து முன்னெச் சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைக்காக தனி மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வர்களை கண்காணிக்க வருவாய் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை அலுவலர்களைக் கொண்டு தனிமைப்படுத்தலைக் கண்கா ணிக்கும் குழு, மருத்துவமனை வளாகத்தினுள் சுகாதாரத்துறை அலுவலர்களைக் கொண்டு தூய் மைப்படுத்துதல் மற்றும் தொற்று நீக்குதல் குழு, பொது இடங்களில் சமூக விலகல் மற்றும் பின்பற்று தலை கண்காணிக்க பல்துறை அலுவலர்களைக் கொண்ட குழுக் கள் உள்ளிட்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பு  நடவடிக்கைகள் மாவட்ட நிர்வா கத்தால் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. எனவே, கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மக் களை காப்பதற்கு மாவட்ட நிர்வா கம் மேற்கொள்ளும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக் கள் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி யும், தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில் முழுமையாக அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அதற் கேற்ப செயல்படுமாறும் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் கேட்டுக் கொண்டிருக் கிறார்.