திருப்பூர், பிப்.27- மக்களையும், விவசாயத்தை யும் பாதிக்கின்ற வகையில் விளை நிலங்களில் உயர்மின் கோபுரங் கள் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தெரிவித் துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத் தில் உயர்மின் கோபுரகளுக்கு எதி ராக விவசாய சங்கங்களின் கூட்டி யக்கம், பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவ சாயிகள் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் பங்கேற்று பேசியதாவது, தமிழ்நாட்டில் 700 கேவி மின் கேபிள்களை விளை நிலங்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்லும் திட் டத்தினால் தமிழகத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள 8 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து நீண்ட போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளை கைது செய் வதும், சிறையில் அடைப்பதும் போன்ற பல்வேறு வகையான கொடுமைகளை விவசாயிகள் அனுபவித்து வருகிறார்கள். இந்நி லையில் பல்லடம் ஒன்றியம் அனுப்பட்டிக் கிராமத்தில் பவர்கி ரிட் நிறுவனம் அமைக்கிற உயர் மின் கோபுரத்தை, ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜோதிமணி, பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் கு.சண்முக சுந்தரம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தோம். அச்சமயம் இப்பகுதியில் 400 மெகாவாட் அளவிற்கான மின்சாரம் கொண்டு செல்லும் பாதையில் எந்தவித இணைப்பும் இன்றி, எங்கள் உடம் பில் மின்சாரம் பாய்வதை இண்டி கேட்டர் மூலமாக சோதனை செய்து அறிந்து கொண்டோம். இதனால் எவ்வித இணைப்பும் இன்றி மின்விளக்கு எரிகிறது என்பதையும் அறிந்து அப்பகுதி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறு கிறோம். ஆகவே, பவர்கிரிட் நிறுவனம் தமிழ்நாட்டு மக்களையும், விவசா யிகளையும் பாதிக்கின்ற, ஏமாற்று கின்ற விதத்தில் செயல்பட்டு வரு கிறது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆகவே, மாவட்ட நிர்வாகமும், தமி ழக அரசாங்கமும் விவசாயிகளை வஞ்சிகின்ற இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். அதுமட்டு மின்றி உயர்மின் அழுத்தத்தினால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய உடல்நலக்கேடு ஏற்படுகின்றது. இந்தப் பிரச்சனையில் மாநில அர சாங்கம் நேரடியாக தலையிட்டு 8 மாவட்ட விவசாயிகள் அனைவ ரையும் பாதுகாக்க வேண்டும். மின் காந்த அலையின் மூலமாக பொது மக்களுக்கு பலவகையான நோய் கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ச்சி என்பது அனைத்து மக்க ளின் உடல் ஆரோக்கியம் சம்பந் தப்பட்ட பிரச்சனை, இவர்களை அழித்துவிட்டு தனியார் நிறுவ னங்களுக்கு சாதகமாக செயல்படு வது வளர்ச்சி இல்லை. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.