tamilnadu

img

அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

அவிநாசி, பிப். 22- அவிநாசிஅருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு சனிக்கிழமை இரவு பொது மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 48 பயணிகளுடன் கேரளம் நோக்கிச் சென்ற கேரள  மாநில அரசுப் பேருந்து மீது எதிரே வந்த கன்டெய் னர் லாரி வியாழக்கிழமை அதிகாலை மோதிய தில் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந் தனர். இக்கோர விபத்து, பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தால் உயிழந்தவர்களுக்கு  பொதுமக்கள் அஞ் சலி செலுத்தும் நிகழ்ச்சி அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை இரவு  நடைபெற்றது.