tamilnadu

img

ஒரேநாளில் போக்குவரத்து விதிமீறிய 305 பேர் மீது வழக்கு

 திருப்பூர், ஜன.1- திருப்பூரில் செவ்வா யன்று போக்குவரத்து விதி மீறிய 305 பேர் மீது வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.  திருப்பூர் மாநகரில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 8 போலீஸ் நிலையங்கள் மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீசார் நடத் திய சோதனையில் இருசக்கர வாக னத்தை ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்ற 111 பேர் மீதும், பின்னால் அமர்ந்து இருந்தவர் தலை கவசம் அணியாமல் சென்ற தால் 100 பேர் மீதும் என 211 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அதுபோல் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 13 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 11 பேர் மீதும் உள்பட மொத்தம் 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.22 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.