திருநெல்வேலி, ஜுலை 13- ஆணவப்படுகொலைகளை தடுக்காமல் முந்தைய ஆட்சியிலும் நடந்ததாக கூறும் தமிழக முதல்வர் அவற்றை தடுக்காதது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண் டித்து நெல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது: இந்த நாட்டில் 4600க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. உல கில் வேறெங்கும் இது இல்லை. சாதிக் கொடுமையும் தீண்டாமையும் தலை விரித்தாடிய தஞ்சையில் சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராக பண்ணையார் களை பணியவைத்தது செங்கொடி இயக் கம். களப்பால் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தம் போட வைத்தது செங்கொடி இயக்கம். களப்பால் முதலியார் வசித்த அந்த தெரு வில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடி யாத நிலை இருந்தது. இன்று அவர் வசித்த வீட்டை வாங்கி திருமண மண்டப மாக அதே தாழ்த்தப்பட்ட மக்கள் பயன் படுத்தி வருகிறார்கள். காலம் மாறி யிருக்கிறது. ஆனாலும் பல பகுதி களில் தீண்டாமைக் கொடுமைகள் நடக் கின்றன. 12 நாட்களுக்கு ஒரு ஆணவ படு கொலை நடப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறுகிறது. 5 ஆண்டுகளில் 157 பேர் ஆணவ படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பி யிருக்கிறது உயர்நீதிமன்றம். அசோக் யாருக்கு தீங்கிழைத்தார். அந்த கிரா மத்தில் அனைவருக்கும் குடிநீர் கேட்டு போராடினார். அவர் தனது தாயாருட னும் புல்லுக்கட்டுடனும் வந்தபோது புல்லுக்கட்டு உரசிவிட்டது. தொட்டால் தீட்டு என்பார்கள் புல்லு பட்டாலும் தீட் டாக கருதி தாயார் தாக்கப்படுகிறார். எந்த மகனும் அதை பார்த்துக்கொண்டு நிற்க மாட்டான். அதையொட்டி வழக்கு, படுகொலை என வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் திமுக ஆட்சியிலும் ஆணவ படுகொலை நடந்தது என்று. அதன் மூலம் இந்த கொலையை நியாயப்படுத்த முதல்வர் விரும்புகிறாரா? இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன் என்று சொல்லியிருக்க வேண்டாமா? முதல்வரின் விருப்பத்தை காவல்துறை நிறைவேற்றுகிறது. இந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல எந்த போராட்டம் நடத்தினாலும் அனுமதி கிடையாது. தமிழ்நாட்டில் அறிவிக்கப் படாத அவசரநிலை இங்கே நடை முறையில் உள்ளது. இவர்கள் இப்படி இருப்பதால்தான் இத்தகைய படு கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? எதற்காக எங்கள் கழுத்தில் கத்தி வைக்கிறீர்கள்? நீங்கள் உறுதி யேற்கும் அரசியல் சட்டத்தில் கூறப்பட் டுள்ள உரிமைகளை, அனைவருக்கும் கவுரமான வாழ்க்கை என்பதை ஏன் மறுக்கிறீர்கள் என்று முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
முகமது ரியாஸ்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகமது ரியாஸ் பேசியதாவது: கண்ணின் மணியான நமது அசோக் கொல்லப்பட்டது ஒருமாதத்துக்கு முன்பு என்றாலும் நிமிடங்களுக்கு முன்பு நடந்ததுபோன்ற உணர்வு ஏற்படு கிறது. உங்களிலும், என்னிலும் உலக மெங்கும் உள்ள மனசாட்சி உள்ள அனை வரின் மனங்களிலும் அசோக் பெயர் நிலை நிற்கிறது. அரசு மருத்துவமனையில் அவரது சடலத்தை தோழர்கள் ரெஜீஸ், பாலா, வேலனுடன் பார்த்தபோது அவ ரது உடலை துண்டு துண்டாக வெட்டு வதற்கான முயற்சி நடந்திருப்பதை அறிய முடிந்தது. எதற்காக தோழர் அசோக்கை இப் படி கொலை செய்தார்கள் என்று இங்கே பேசிய பலரும் கேட்டார்கள். இந்த தமிழ் நாடு சாதியத்துக்கு எதிரான ஏராளமான போராட்டங்களை கண்ட மண். 1920களில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நடத்திய சாதியத்துக்கு எதிரான உன்னத மான போராட்டம் தமிழ்நாட்டில் இன்ன மும் தொடர்கிறது. 1942இல் சாதிய கொடு மைகளுக்கு எதிரான சட்டம் தமிழ்நாட் டில் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இந்தியாவின் முக்கிய தினசரி ஒன்று தமிழ்நாட்டில் இன்றும் 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிச் சுவர்களும், ஆணவக் கொலைகளும் நடப்பதாக எழுதுகிறது. அசோக், உயிரோடு இருந்த காலத்தை விட அவன் கொல்லப்பட்ட பிறகு அவனும் அவன் எங்களிடம் ஒப்படைத்துள்ள லட்சியங்களும் சாதிய சக்திகளின் தூக்கத்தை கெடுத்திருக்கி றது என்பது உறுதி. அசோக் கொல்லப் பட்ட பிறகு நடந்த நிகழ்ச்சிகளில் அவ னது சகோதரர்கள் மணிகண்டனும், சதீசும் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்க மிட்டு எங்களோடு உள்ளனர் என்பது அசோக்கின் மரணத்தால் ஏற்பட்ட வலிக்கிடையிலும் உற்சாகமளிக்கிறது என்று பேசினார். பொதுக்கூட்டத்தி்ல் சிபிஐஎம்எல் நிர்வாகி நடராஜன், எஸ்யுசிஐ நிர்வாகி ஏ.ரங்கசாமி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்க ரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி, வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் மேனகா, பாளை கருணா ஆகியோர் பேசினர். பொதுக்கூட்ட மேடையில் அசோக் குடும்பத்தின் பாதுகாப்பு நிதி யாக ரூ.5 லட்சத்தை சீத்தாராம் யெச்சூரி யும், கே.பாலகிருஷ்ணனும், அசோக் கின் தந்தை முருகன், தாயார் ஆவுடை யம்மாள் சகோதரர்களிடம் வழங்கினர். அசோக் குறித்த நூல், பாடல்கள், ஆவ ணப்பட குறுந்தகடுகள் வெளியிடப் பட்டன.
செய்தி: சி.முருகேசன்
படங்கள்: பொன்மாறன்