tamilnadu

வி.கே.புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

திருநெல்வேலி, ஏப்.21-வி.கே.புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின்மகன் சுந்தரபாண்டியன் இவர் பாபநாசம் பணிமனையில் ஓட்டுநராக உள்ளார். சம்பவத்தன்று பாபநாசத்திலிருந்து நெல்லைக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது விகேபுரம் தனியார் பள்ளி பகுதியில் வந்தபோதுஎதிரே வந்த ஆம்னி வேன் மீது பேருந்து உரசியதாக கூறப்படுகிறது. இதில் வேன் கண்ணாடியும் உடைந்துள் ளது ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதால் கோபமடைந்த வேன் ஓட்டுனர் பின்னாலேயே துரத்தி சென்று பேருந்தை மடக்கியுள்ளார். பிறகு அவருக்கும் அரசு பேருந்து ஓட்டுநருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு பேருந்துஓட்டுநர் தாக்கப்பட்டார். காயமடைந்த சுந்தரபாண்டியன் அம்பை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் .ஆம்னிவேனை ஓட்டி வந்த தாழையூத்து சங்கர் நகர் பகுதியைசேர்ந்த குமார் என்பது தெரியவந்தது .இது குறித்து விகேபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.