திருநெல்வேலி, ஜூன் 30- நெல்லை மாவட்டம் சேரை ஒன்றியம் பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் கடனை கேட்டு நெருக்கடி கொடுக்க கூடாது என்று சார்ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் உத்தரவை மீறி குழு பெண்களிடம் கட னையும் வட்டியையும் கேட்டு நெருக்கடி கொடுக்கும் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கற்பகம் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட சார்ஆட்சியர் எந்தெந்த நுண்நிதி நிறு வனங்கள் நெருக்கடி கொடுக்கிறது என்று நம்மிடம் கேட்டு விபரத்தை சேகரித்து கொண்டு உடனடியாக வட்டாட்சியருக்கு தொடர்பு கொண்டு நுண்நிதி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை ஒருவார காலத்திற்குள் நடத்தவும் பாதிக்கப் பட்ட பெண்களை தனித்தனியாக எனக்கு புகார் மனு தர சொல்லுங்கள். உடனடியாக சம்பந்தபட்ட நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கி றேன் என்றும் உறுதியளித்துள்ளார்.