tamilnadu

மணல் கொள்ளை: 3 பேர் கைது

திருநெல்வேலி, ஜூன் 7- தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலைய  எல்லைக் குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்  நிஷாந்த் ரோந்து பணி யில் இருந்த போது மணல் திருடுவதாக சிறப்பு உதவி ஆய்வா ளர் முத்து கிருஷ்ணன் கொடுத்த தகவலின் பெயரில் அங்கு  விரைந்து சென்றதில் உரிய அனுமதியின்றி சட்டவிரோத மாக மணலை டிப்பர் லாரியில் திருடி வந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு மணல் திருட்டில் ஈடு பட்ட தங்கபாண்டி, மஹேந்திரன் மற்றும் சக்தி முருகன் ஆகி யோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.