திருநெல்வேலி, மே 20- இ-பாஸ் பெறுவதில் தளர்வு அறிவிக்கப் பட்டு உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4-வது கட்டமாக மே 31 வரை ஊரடங்கு நீட்டி க்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட ஊரடங்கின் போது இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மளி கை, காய்கறி கடைகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு, மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் உள்மாவட்டத்துக்குள் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறு வதில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நடை முறை மே 18 முதல் அமலுக்கு வந்தது. இதனால் நெல்லையில் வாகன போக்கு வரத்து அதிகரித்தது. வழக்கம்போல், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள், வேன், லாரிகள் என அனைத்து வாகனங்களும் சாலையில் அங்குமிங்கும் சென்றன.
முக்கிய சந்திப்பு களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நின்று போக்கு வரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர மருத்துவமனைகள், கடை களுக்கு செவ்வாயன்று ஏராளமானோர் கார்க ளில் வந்தனர். அவர்கள் தங்களது கார்களை மருத்துவமனை, கடைகள் முன்பு நிறுத்தி இருந்ததால் அவை சாலையோரங்களில் அணிவகுத்து நின்றன. நெல்லை மாவட்ட எல்லையான வசவப்பபுரம், மாறாந்தை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட் டங்களைச் சேர்ந்த மக்கள் அங்குமிங்கும் செல்ல போலீசார் பெருமளவு நெருக்கடி கொ டுக்கவில்லை. அதே நேரத்தில், கங்கை கொண்டான், காவல்கிணறு சோதனைச்சாவ டிகளில் சென்னை, மும்பையில் இருந்து யாரும் வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற் காக தொடர்ந்து சோதனை நடைபெற்று வரு கிறது.