திருநெல்வேலி, ஜூலை 1- நெல்லை மாவட்டம் சேரை ஒன்றியம் வீரவநல்லூரில் உள்ள சலவைத்தொழிலா ளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணம் ரூ.7500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப் பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் இலவச மின்சாரம் , இலவச அயன்பாக்ஸ் வழங்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் கடனை யும் வட்டியையும் கேட்டு நெருக்கடி கொடுக் கக்கூடாது என்று சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறி கட்டா யப்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். ஹெல்ப் லைன் துவங்கி, தனிஅதிகாரி நியமிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கற்பகம் மற்றும் சாந்தி, லெட்சுமி உள்பட பெண்கள் பலர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர், கோரிக்கை மீது பரீசிலனை செய்கிறோம். மேல் அதிகாரிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தார்.