நெல்லை, ஜூன் 27- ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நட வடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கி ணைப்பாளர்களில் ஒருவரான செ. பால்ராஜ் மற்றும் அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்ட தலைவர் வி.பார்த்த சாரதி ஆகியோர் கூறியதாவது: கடந்த ஜாக்டோ -ஜியோ போராட் டத்தில் தமிழக முதல்வரின் வேண்டு கோளை ஏற்று பணிக்குத் திரும்பிய வர்களில் தமிழகம் முழுவதும் 7 ஆயி ரத்திற்கு மேற்பட்டவர்கள் மீது 17(ஆ) ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறு தல்கள் மற்றும் குற்றவியல் வழக்கு கள் நிலுவையில் உள்ளன.இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது வரை வாபஸ் பெறப்படவில்லை.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரம்ப மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் 13 பேரும் பட்ட தாரி ஆசிரியர்கள் 2 பேரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் என 17 ஆசிரியர்களும் 21 அரசு ஊழியர்களும் என மொத்தம் 38 பேர் கைது செய்யப் பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நிர்வாகத்தால் 2019 ஜனவரி 24 முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு 2019 பிப்ரவரி 14ல் மீண்டும் பணிக்கு திரும்பினர். இவையெல்லாம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை முடிவுக்கு கொண்டு வரப்பட வில்லை. இதனால் பணி நிறைவு மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரி யர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரி தும் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் இரவு பகல் பாராது கடு மையாக உழைக்கும் இவ்வேளையில் கூட 17 மாதங்களுக்கு மேலாகியும் போராடியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இது குறித்து அதிகாரி கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வரி டமும் நேரிடையாக கோரிக்கை வைத் துள்ளோம். தற்போது தேனி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை யினர் 13 பேர் மீதான ஒழுங்கு நட வடிக்கையை திரும்பப்பெற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைப்போன்று தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவ டிக்கைகளை ரத்து செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு வர வேற்கிறது. இதைப்போன்று கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் போராட் டத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து விதமான ஒழுங்கு நடவடிக்கைகளையும் முழு மையாக ரத்து செய்து நியாயமாக கிடைக்கக்கூடிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் முழுமையாக கிடைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.