tamilnadu

நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில் நெல்லை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

திருநெல்வேலி, மே 31- நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயிலுக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலை யத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. இதையொட்டி பயணி களுக்கான ரெயில், பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இந்த நிலையில் ஊரடங்கு படிப்படி யாக தளர்த்தப்பட்டு வருகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டதோடு, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங் கப்பட்டது. அதாவது ரயில்கள் இயக்கப் படும் வழித்தடத்தில் அந்த ரெயில் நிறுத்தப் படும் நிலையங்களில் மட்டும் முன்பதிவு தொடங்கப்பட்டது. அதன்படி திருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நெல்லை சந்திப்பில் நின்று செல்லும் என்பதால், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அங்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. புதிய நுழைவு வாசல் பகுதியில் அமைந்திருக்கும் முன்பதிவு கவுன்ட்ட ருக்கு ஒரு சில பயணிகள் வந்தனர். அவர்கள் ரெயில் புறப்படும் நேரம், டிக்கெட் விவ ரங்களை கேட்டு, முன்பதிவு செய்தார்கள். இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பயணிகள் சமூக இடை வெளியுடன் நின்று டிக்கெட் முன்பதிவு செய் வதை கண்காணித்தனர்.