திட்டமிட்ட படுகொலை
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அசோக் தனது தாயார் ஆவுடையம் மாளுடன் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே சென்றுள்ளார். அப்போது சாதிவெறி பிடித்த சமூக விரோதிகள் சிலர் சக்திகள் அவர்களை வழிமறித்துதாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருதரப்பிலும் வழக்குப் பதிவு செய்து சாதி ஆதிக்கத் சக்திகளுக்கு ஊக்க மளிக்கும் செயலை காவல்துறையினர் மேற்கொண்டனர். இதன் விளைவாக இருதரப்பினரும் தினமும் காவல்நிலை யத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.
இதன் பொருட்டு, இரவு ஷிப்டில் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், புதனன்று(12.06.2019) இரவு சுமார் 9 மணியளவில் அசோக் வேலைக்கு செல்லும் போது சாதி வெறி கும்பல் கொடூரமாக வெட்டி அவரை படுகொலை செய்துள்ளது. சடலத்தை ரயில் தண்டவாளம் அருகே இழுத்துச் சென்று வீசியுள்ளது. தகவல் அறிந்ததும் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூரா ய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திட்டமிட்ட இந்த படுகொலை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள் ளது. அசோக்கின் தந்தை முருகன் கூலித் தொழிலாளியாவார். அசோக்கிற்கு மணிகண்டன் என்கிற அண்ணனும் சதீஷ் என்கிற தம்பியும் உள்ளனர்.
மருத்துவமனை முன்பு மறியல்
வியாழனன்று காலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அசோக்கின் குடும்பத்தினரும் உற வினர்களும் சிபிஎம், வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் திரண்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணன், மாநில செயலாளர் மு.கந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ் குமார், செயலாளர் எஸ். பாலா மாவட்டத் தலைவர் மேனகா, செயலாளர் பி.உச்சி மாகாளி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சத்யா, செயலாளர் தினேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், வீரன் சுந்தரலிங்கம் பேரவை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் பாண்டியன், திராவிடர் தமிழர் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன், தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார், தமிழர் உரிமை மீட்புக் களம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லெனின், வி.சி.க நிர்வாகிகள் மற்றும் கரையிருப்பு, ஆர்.எஸ்.ஏ நகர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வியாழன் மாலை 6 மணிக்கு பிறகு சாராட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்த பிறகே சடலத்தை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.