districts

img

விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட மாநாடு கோரிக்கை

கும்பகோணம்,  ஆக.19 - இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட 18-வது மாநாடு கும்பகோணம் அருகே தாரா சுரம் தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது.  தாராசுரம் பேருந்து  நிலையத்திலிருந்து பேரணி யாக வந்து, பகத்சிங் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மாவட்டக் குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை வாலிபர் சங்க கொடியை ஏற்றினார். மாவட்டத் தலைவர் ஆம்பல்  துரை.ஏசுராஜா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழு கௌர வத் தலைவர் மாமன்ற உறுப்பினர் ஏ.செல்வம் வரவேற்றார். மாநில துணை செயலாளர் சி.பாலசந்தர போஸ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எஸ்.சந்துரு வாழ்த்துரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அரு ளரசன் வேலை அறிக்கை யும், மாவட்டப் பொருளாளர்  ராமன் வரவு-செலவு அறிக் கையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத்தலைவர் கே.பி.ஜோதிபாசு நிறை வுரை ஆற்றினார். வரவேற்பு  குழு செயலாளர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.  மாநாட்டில் புதிய தலை வராக அருளரசன், செயலா ளராக ஆம்பல் துரை.ஏசு ராஜா, துணைத் தலைவராக ரஞ்சித்குமார், துணைச் செயலாளர்களாக தமிழரசி, பெர்ணாட்சா, செயற்குழு உறுப்பினர்களாக தமி ழினியன், தமிழ்ச்செல்வன் உட்பட 27 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற் சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பை வழங்கிட வேண் டும். மாவட்ட தலைமை மருத்துவமனையான கும்ப கோணம் தலைமை மருத்து வமனையை தரம் உயர்த்தி போதிய மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். கும்பகோணத்தை சுற்றி யுள்ள கிராமங்களை உள்ள டக்கிய பகுதிகளை இணைத்து கும்பகோ ணத்தை மையமாகக் கொண்டு, புதிய மாவட் டத்தை உருவாக்கிட வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.