tamilnadu

நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பறவைகள் திருவிழா

திருநெல்வேலி, ஜன.2- நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட குளங்களில் தற்போது தாமிர பரணி பறவைகள் திருவிழா நடத்தப் படுகிறது. கடந்த 10 நாட்களில் வேய்ந்தான்குளத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட 25 வகையான பறவை யினங்கள் வந்துள்ளன. நெல்லை புதிய பஸ் நிலையத்தை யொட்டி உள்ளது வேய்ந்தான்குளம். 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் தன்னார்வலர்கள் மூலம் தூர்வாரப்பட்டு, குளத்தின் கரைகள் சுற்றிலும் பலப்படுத்தப்பட்டது. குளத் திற்கு தண்ணீர் வந்ததும், பறவைகள் வந்து அமர்ந்து செல்லும் வகையில் குளத்தின் நடுவே ஆங்காங்கே மண் திட்டுகள் உருவாக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் வேய்ந் தான்குளம் நிரம்பியது. இதையடுத்து குளத்துக்கு பல்வேறு இன பறவைகள் வந்து குவிந்துள்ளன. கடந்த 10 நாட்களில் வேய்ந்தான்குளத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட 25 வகையான பறவையினங்கள் வந்துள்ளன.  ஐரோப்பிய கண்டத்தில் இருந்து நீல சிறகு வாத்து, வெளிநாட்டு பறவை களான பவளக்கால், செங்கால் நாரை உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் வேய்ந்தான்குளத்திற்கு வந்துள்ளன.நாமகோழி கூடு கட்டி தனது குஞ்சு களுடன் காணப்படுகிறது. அவை தண்ணீரில் ஆனந்தமாக நீந்துகின்றன. இதையொட்டி சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் ‌ஷில்பா குளத்து தண்ணீ ரில் பறவைகளுக்காக சுமார் 2000 மீன் குஞ்சுகளை விட்டார்.  வேய்ந்தான் குளத்தில் காணப் படும் பறவை இனங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. மேலும் பறவைகள் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. அதிகாரிகள் குளத்தை சுற்றி வந்து தொலை நோக்கி மூலம் பறவைகளை கணக்கெ டுத்தனர்.