tamilnadu

வெள்ளப்பெருக்கால் வெற்றிலைக் கொடிகள் சேதம் - விவசாயிகள் வேதனை

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெற்றிலை கொடிக் கால்களை வெள்ளநீர் சூழ்ந்து 90% கொடிகள் அழுகி விட்டதாக ஆத்தூரைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த பொங்கலுக்கு மகசூல் வியாபாரத்தை விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், டிச.17-ஆம் பெய்த அதிகனமழை காரணமாக, தாமிரபரணியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 500 ஏக்கர் தோட்டம் அறுவடைக்கு தயாராயிருந்த வெற்றிலைகள் அழுகிப் போயின.

திருச்செந்தூர் அருகே ஆத்தூர், கீரனூர், முக்காணி, கொற்கை, சுகந்தலை, வெள்ளைக்கோயில் உள்ளிட்ட சில கிராமங்களில் சுமார் 10,000 விவசாய குடும்பங்கள் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கூட்டு விவசாய முறையில் வெற்றிலைகளைப் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு  தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நிர்வளதுறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். எந்தவொரு கடுமையான வானிலையும் ஆபத்தானது.

விஜயா கோபி 43 எனும் விவசாயி, பயிரிடுவதற்காக நாங்கள் பயிரின் தண்டுகள் மற்றும் கொடிகளை வெட்டி விடுவோம். ஆத்தூர் இலை தனிச் சுவை கொண்டது.

மண்ணிடத் தன்மை நல்லதாக அமைய வாழைப்பழ தோள்கள் மண்ணுக்கு உரமாகப் பயன்படுத்தப்படும்.

வெற்றிலையின் ஆயுள் காலமானது வெறும் இரண்டரை வருடமாக இருக்கிறது.

வெற்றிலை யின் வகைகள் நமது தமிழ் நாட்டில் விளைவது நாட்டுக் கொடி. இது அதிகமாக ஆத்தூர் ,சோலவந்தான் ,கும்பகோணம் போன்ற ஊர்களில் அதிகமாக விளைகிறது.

இது இந்தியாவில்  ராஜஸ்தான், டெல்லி,மத்திய பிரதேஷ் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது .

5 மாதங்களுக்கு முன்பு வெற்றிலையின் தனித்துவமான சுவை அறிந்து புவியியல் குறியீடு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிலை கிலோவுக்கு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 200 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி கனமழையால் வெற்றிலை கொடிக் கால்களில் வெள்ளநீர் சூழ்ந்து 90% கொடிகள் அழுகி விட்டது. இதற்காக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.