tamilnadu

தென்காசி ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதி மறுப்பு காவல்துறைக்கு சிஐடியு கண்டனம்

திருநெல்வேலி, ஜூன் 18- தென்காசி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கட்டுமானத் தொழி லாளர்கள் சங்கம் சார்பாக கட்டு மானத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ. 7500 வழங்கிடவும்  அனைத்து ரேசன்  பொருட்கள் 6 மாதத்திற்கு இலவச மாக வழங்கிடவும் மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் புத னன்று நடைபெற்றது. கட்டுமான சங்க மாவட்டத்  தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன், மாவட்ட இணைச்  செயலாளர் மணிகண்டன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ரவிச் சந்திரன், தென்காசி வட்டாரத் தலை வர் லெனின்குமார், பீடி சங்க வட்டா ரச் செயலாளர் குருசாமி, செங் கோட்டை வட்டாரச் செயலாளர் மாரியப்பன், கட்டுமான சங்க நிர்வாகி கள் கசமுத்து, முருகன், மாரியப்பன்,  மாரியம்மாள் மற்றும் 30க்கும் மேற் பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுக்க சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.வேல்முருகன்,  கட்டு மான சங்க மாவட்டத் தலைவர்  என்.சுரேஷ், பொதுச் செயலாளர்  எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர்  செல்லும்போது, தென்காசி காவல் துறை துணை கண்காணிப்பாளர்  கோகுலகிருஷ்ணன், சங்க  பொறுப்பாளர்களிடம் மிகவும் மோச மான முறையில் ஒருமையில் பேசி னார். அவர்களை தாக்கவும் முயற்சித்தார்.

‘நாங்கள் தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை கொடுக்கத்  தான் வந்தோம்’ என பதில் சொன்ன  பிறகும் மனுவை கொடுக்க அனுமதி  இல்லை. போராட்டம் நடத்தினா  வழக்கு போட்டு வெளியில் வர முடி யாமல் செய்து விடுவேன், அனை வரையும் உள்ளே போட்டு விடு வேன்’ என மிரட்டினார்.  அவர் அருகில் இருந்த தென்காசி  காவல்துறை ஆய்வாளர் ஆடி வேலும், டிஎஸ்பி பேசியது போன்றே  பேசினார்.  மாநில முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு கொடுக்கும் இயக்  கம் நடைபெறும்போது தென்காசி யில் மட்டும் பசி பட்டினியால் வாடும் தொழிலாளர்களின் மனுவை  கொடுக்க கூட அனுமதிமறுத்து  ஜனநாயக உரிமை மறுப்பு செய்து  வரும் காவல்துறை அதிகாரி களின் மோசமான நடவ டிக்கைக்கு சிஐடியு திருநெல்வேலி  -  தென்காசி மாவட்ட குழு கண்டனம் தெரிவித்துள்ளது.