tamilnadu

img

செப்.6அன்று புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, செப். 2- புதிய கல்விக் கொள்கையையும் அரசாணை 145-ஐயும் திரும்பப் பெறக்கோரி  ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் இம்மாதம் 6ஆம் தேதி நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்க ளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படவுள்ளது. நெல்லை  சந்திப்பு சிந்துபூந்துறையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நிர்வாகி களின் ஆலோசனைக் கூட்டம்  நடை பெற்றது. கூட்டத்திற்கு  சங்க மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் செ.பால்ராஜ், வீ.பார்த்த சாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வி.பெரியதுரை, செ.சாம் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் க.பிச்சைக்கனி வரவேற்றார். மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் ந.குமாரவேல், மூட்டா மூன்றாம் மண்டல பொருளாளர் பி.சிவஞானம் ஆகி யோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில்  புதிய தேசியக் கல்விக் கொள்கை -2019 வரைவு அறிக்கை, அர சாணை 145 ஆகியவற்றை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும். குறு வள மையங்க ளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்ப தை கைவிடவேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோர் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பணி மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி இம்மாதம் 6 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில் ஆகிய மூன்று இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது  போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நந்தக்குமார், சீனிவாசன், இசக்கிமுத்து, எடிசன், பவுல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர் கோமதிநாயகம் நன்றி கூறினார்.