tamilnadu

img

மாரிதாஸ் மீது மேலப்பாளையத்தில் வழக்குப்பதிவு

திருநெல்வேலி:
சென்னை மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கொரோனா தொற்றையும் மேலப்பாளையம் பகுதியில் செயல்படும் முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றுபடுத்தி சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பேசி வீடியோ பதிவிட்டதற்காக மாரிதாஸ் மீது இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை  மேலப்பாளையம் காவல் நிலையத்தில்  நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.