tamilnadu

img

சிஐடியு பீடித்தொழிலாளர் சங்க போராட்டத்தால் வேலை வழங்க கம்பெனி நிர்வாகம் உறுதி

      திருநெல்வேலி,  ஜூலை 4- நெல்லை மாவட்டம் கூடன் குளத்தில் உள்ள கிங் பீடி கம்பெனி யை மூடுவதற்கு நிர்வாகம் அனைத்து  தொழிலாளர்களிடம் வலுக்கட்டாய மாக பி.எப். தொகையை பெறக் கோரி எழுதி வாங்குவதைக் கண்டித் தும் இதில் தொழிலாளர் துறை அதிகாரிகள் தலையிடக் கோரியும் அனைத்து பீடித்  தொழிலாளர்க ளுக்கும்  உடனே வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சிஐடியு பீடித் தொழிலாளர்  சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று கம்பெ னிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் தேவி தலைமை வகித்தார்.  இதனைத்தொடர்ந்து கிங் பீடி கம்பெனி நிர்வாகம் பிஎப்.தொகை பெற எழுதி வாங்குவதை நிறுத்துவதா கவும்  திங்கள்கிழமை முதல்  வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது .இதனால் சிஐடியு பீடிதொழிலாளர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.இந்த போராட்டத்தில் சிஐடியு   மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்த ராஜ் மற்றும் கிளை நிவாகிகள் பங்கேற்றனர்.