திருநெல்வேலி, ஜூன் 15- நெல்லை கரையிருப் பில் வாலிபர் சங்க பொருளா ளர் அசோக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்ற வாளிகள் 6 பேர் சனிக் கிழமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிராஜ் (19), முத்துப் பாண்டி (27), முருகன்(55), பாலு (48), மூக்கன் (45), கணேசன் (43) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை குற்றவாளி களை சனிக்கிழமை காலை நெல்லை தீண்டாமை வன் கொடுமை நீதிமன்றத்தில் நீதிபதி(பொ) அருள்முரு கன் முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிபதி அருள் முருகன். குற்றவாளிகளை ஜூன் 28-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவ லில் வைக்க உத்தரவிட் டார். இதனை தொடர்ந்து 6 பேரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட் டனர்.