tamilnadu

வேம்பாரில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தடை உத்தரவை மீறினால் நடவடிக்கை: துறைமுக இயக்குநர்

தூத்துக்குடி, ஜூன் 14- வேம்பாரில் அனைத்து விசைப் படகுகளும் மறு உத்தரவு வரும்வரை கடலு க்குள் மீன் பிடி தொழில் மேற்கொள்ள செல்லக் கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் மீனவர்கள் 70- க்கும் மேற்பட்ட விசைப் பட குகளிலும் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளி லும் மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். கொரோ னோ பொது முடக்கம் காரண மாக மார்ச் 24 முதல் ஏப்.16 வரையும், மீன்பிடி தடைக்கா லம் காரணமாக ஏப்.15  முதல் மே 30 வரையிலும்  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறை முகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் உள்ள படகுகள் மீன்பிடி  தொழிலுக்கு செல்லக் கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவிப்பு செய்யப் பட்டு மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு கார ணமாக ஜூன் 1 முதல்  மீன்வளத் துறை பரிந்து ரைத்த விதிமுறைகளை பின்பற்றி மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் படகுகளை கண்காணிக்கவும், மீன் இறங்கு தளங்களில் சமூக இடைவெளியை மீனவர்கள் கடைப்பிடிப்பதையும் மீன வர்கள் கிருமிநாசினி பயன்ப டுத்துவதை கண்காணிக்க வும் ஒரு குழு அமைக்கப் பட்டது.

 இதில் நேர கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை மீறி வேம்பார் விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன்பி டித் தொழிலில் ஈடுபட்டதா கவும் அதுகுறித்த தகவல் தெ ரியவந்தும், வேம்பாரில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப் படகுகளும் கட லுக்குள் மீன்பிடித்தொழில் மேற்கொள்ள செல்லக் கூடாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக உதவி  இயக்குனர் அன்றோ பிரின்ஸி வைலா வெளி யிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழு ங்குபடுத்தும் சட்டம் 1983 -ன்படி மீன்பிடி விசைப் பட குகள் மீன்வளத் துறையிடம் டோக்கன் பெற்று காலை 5  மணிக்கு மீன்பிடிக்கச் சென்று  இரவு 9 மணிக்கு கரை திரும் பிட வேண்டும் என்பது சட்ட  நடைமுறை. ஆனால் தூத்துக் குடி மாவட்டம் வேம்பார் மீன்பிடி இயங்குதளத்தை தங்கு தளமாக கொண்ட மீன்பிடி விசைப் படகுகள்  டோக்கன் பெறாமலும், நேர  கட்டுப்பாட்டை மீறி தொடர் ந்து கடலில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிய வரு கிறது. இத்தகைய செயலால் வேம்பாரில் உள்ள அனைத்து மீன்பிடி விசைப் படகுகளும் மறு உத்தரவு வரும்வரை கடலுக்குள் மீன் பிடி தொழில் மேற்கொள்ள செல்லக் கூடாது என தெரி விக்கப்படுகிறது. மேலும் உத்தரவை மீறும் விசைப்  படகுகள் மீது கடுமையான  நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிவித் துள்ளார்.