தூத்துக்குடி, ஏப்.1-
தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் பயணிகளை காரில் இறக்கி விட்டு செல்பவர்களிடம் பெறப்பட்ட கட்டணம்ரத்து செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி கீழுரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கார்களை ரயில் நிலையத்திற்கு உள்ளே பார்க்கிங் செய்தால் மட்டுமே ரூ. 20 கட்டணம் செலுத்த வேண்டும்.ஆனால் ரயில்நிலையத்திற்குள் பயணிகளை காரில் கொண்டு வந்து இறக்கி விட்டு உடனே கிளம்பும் கார்களுக்கும் ரூ. 20 கட்டணம் பெறப்பட்டு வந்தது. இந்த விஷயம்குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எம்பவர் நுகர்வோர்கல்வி மைய இயக்குனர் எம்பவர் சங்கர் உடனேதூத்துக்குடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில் நிலையத்திற்குள் பார்க்கிங் செய்யும் கார்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும், இறக்கி விட்டு செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என நேரில் வலியுறுத்தினார்.மேலும் இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கும் எம்பவர் அமைப்பு சார்பில் கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதன் விளைவாக தற்போது கீழூர் ரயில் நிலையத்தில் பயணிகளை காரில் இறக்கி விட்டு செல்பவர்களிடம் பெறப் பட்ட கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுஇது குறித்து ரயில் நிலையத்தில் உள்ள பலகையிலும்எழுதி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் காரில் வந்து செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.