tamilnadu

வாலிபர் கைது

தூத்துக்குடி, ஜூன் 6 தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் பகுதியிலுள்ள நாகம்மாள் தேவி கோவிலில் 15 வயது சிறு மிக்கு திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சமூ கநலத்துறை அலுவலர் சண்முக லட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை நட த்தினர். அதில் வேம்பார் கிரா மத்தைச் சேர்ந்த முனியான்டி மகன் குருசாமி (21) என்பவர் பத்தாம் வகு ப்பு படிக்கும் 15 வயது சிறுமியை தாலி கட்டி திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மைனர் பெண்ணை திரு மணம் செய்த குருசாமியை கைது செய்தனர்.