தூத்துக்குடி,ஜூலை 2- தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய போது விஷவாயு தாக்கி 4பேர் பலியாகினர். தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டி யில் சுத்தம் செய்வதற்காக நெல்லை மாவட்டம் வீரவ நல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (20) ஆகிய 4 பேர் வந்துள்ள னர். முதலில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டு, இசக்கிராஜாவும் பாண்டியும் தொட்டிக்குள் இறங்கி யுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் இறங்கி யுள்ளனர். பின்னர் அவர்களும் வெளியே வரவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான முறையில் உள்ளே இறங்கி பார்த்த்தபோது போது விஷவாயு தாக்கி 4பேரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 4பேரின் உடல்களும் வெளியே மீட்கப்பட்டு, பிரேத பரி சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தட்டாபாறை காவல் ஆய்வாளர் (பொ) சரவண பெருமாள் வழக்குப் பதிநது விசாரணை நடத்தி வருகிறார். வீட்டின் உரிமை யாளர் சோமசுந்தரம் என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.