தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசி ரிய, ஆசிரியைகளுக்கு சாரண, சாரணிய இயக்கம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கப் பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பணி யாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் “கபசுர குடிநீர்” சாரண, சாரணிய இயக்கம் சார்பில் திங்களன்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை ஆணைய ருமான ஞானகௌரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் ஆசிரிய ஆசிரி யைகளுக்கு கபசுரகுடிநீர் வழங்கி தொடங்கி வைத்தனர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்த முகாமா னது சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரப்பேட்டை ஆண் கள் மேல்நிலைப் பள்ளி, சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி களில் ஆசிரிய, ஆசிரியைகள் சுமார் 660 பேர் மற்றும் இதர பணியாளர்கள் 55 பேர் ஆகி யோருக்கு தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் கபசுரகுடி நீர் வழங்கப்பட்டது.