தூத்துக்குடி, ஜூலை 22- தூத்துக்குடி மாவட்டத்தில கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மில்லில் 56 தொழி லாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கோவில்பட்டியில் புதன் அன்று மட்டும் 85 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மில் முழுவதும் தற்போது கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்பட்டியில் நகராட்சி சுகா தார அலுவலர், அம்மா உணவக ஊழியர் 3 பேர் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவக ஊழி யர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தால் அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக நகராட்சி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
பேரூராட்சி அலுவலகம் மூடல்
நாசரேத் பேரூராட்சி அலுவலக ஊழி யர்கள் 3 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரது உடலை இரவோடு இரவாக அடக் கம் செய்த போது எந்தவித கவச பாதுகாப்பு உடைகள் அணியாமல் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பேரூராட்சி அலு வலகம் பூட்டப்பட்டது.