tamilnadu

உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயற்சி மனைவி, மகனை போலீஸ் தேடல்

தூத்துக்குடி, ஜூன் 11- ஆழ்வார்திருநகரி அருகே புரோட்டா வில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்றதாக அவரது மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திரு நகரியை சேர்ந்தவர் நயினார் என்பவரது மகன் செந்தில்வேல் முருகன் (49). இவ ருக்கு திருச்செல்வி (47) என்ற மனைவியும் கிருஷ்ணசாமி (23) என்ற மகனும் உள்ள னர். செந்தில்வேல் முருகனுக்கு கடந்த ஒரு ஆண்டாகவே உடல்நிலை சரியில்லாத தால் வேலைக்கு செல்லவில்லையாம். இத னால் அவரது குடும்பத்தினர் கேட்டதில் தக ராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந் நிலையில் புரோட்டாவில் எலி மருந்து கலந்து அவருக்கு கொடுத்தார்களாம். இதை சாப்பிட்ட அவர் மயங்கி விழுந்துள்ளார்.  மேலும் செந்தில்வேல்முருகனை அவ ரது மனைவி, மகன் ஆகியோர் கம்பால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காயம்பட்ட வரை மீட்டு பாளை.ஹைகிரவுண்ட் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். இது குறித்த புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி ஆய்வாளர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.