தூத்துக்குடி, ஆக.20- வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ.7500 ,மாநில அரசு ரூ. 5,000 என 12,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய அரசு உணவுக் கிடங்குகளில் உள்ள 10 லட்சம் டன் உணவு தானியத்தை நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், மின் கட்டணத்தை மக்கள் தலையில் சுமத்தாமல் கேரள அரசை போன்று 50 சதவீத கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் வியாழனன்று தொடங்கி யது. தூத்துக்குடி மாநகரில் சிதம்பரநகரில் பிரச்சார இயக்கம் மாநகர் செயலாளர் டி.ராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே எஸ் அர்ச்சுனன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி. குமாரவேல், எம் எஸ்.முத்து.வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் துறைமுகம் எம். காசி, மாணவர் சங்கம் ஜாய்சன், சிஐடியு முருகன், பெருமாள், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க ஏ.லெட்சுமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் 54வது வார்டு கிளை சார்பில் நடைபெற்ற இயக்கத் திற்கு கிளைச் செயலாளர் ரூபஸ் தலைமை தாங்கினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா பேச்சிமுத்து ,புறநகர் செயலாளர் பா.ராஜா, புறநகர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் இனாம்மணியாச்சி கிளையில் பிரச்சாரம் நடைபெற்றது. கிளை செயலாளர் அழகுசுப்பு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன்,ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் இராமசுப்பு, கிருஷ்ணவேணி, மணி, சின்னத்தம்பி, கணேசன்,தினேஷ் குமார் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், கோவில்பட்டி நகரக்குழு நடத்திய பிரச்சாரத்தில் நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகரக்குழு உறுப்பினர் சக்திவேல் முருகன், விஜய லட்சுமி, சக்கரையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற இயக்கத்தினை சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலகணபதி, வில்சன், பாஸ்கர் ,இருதய ராஜன், ஓய்வூதியர்கள் ராஜன் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவைகுண்டம்
திருவைகுண்டத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சு. நம்பிராஜன் தலைமை தாங்கினார்.ஒன்றிய குழுஉறுப்பினர்கள் ராமச்சந்திரன், ராமலிங்கம் மற்றும் முருகேசன், மாரியப்பன், போக்குவரத்து குமரகுருபரன்,ஆறுமுகம், உலகநாதன் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பா.புவிராஜ் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார், பிரச்சாரத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் ராமலிங்கம்,ஜோதி, நகர செயலாளர் பாலமுருகன், மணிகண்டன், பிச்சைக்கனி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் சந்திப்பு இயக்கம் ஒன்றிய செய லாளர் முத்துக்குமார தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம், ஜெயபாண்டியன், சந்திர சேகர் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.
எட்டையுரம்
எட்டையபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் எட்டையபுரம் பஜார் மற்றும் எட்டையபுரம் எட்டாவது வார்டு பகுதிகளில் வீடுவீடாக செனறு துண்டு பிரசும் வினி யோகம் செய்யப்பட்டது இதில் தாலுகா செயலாளர் கு.ரவீந்திரன் கடசியின் நகர குழு உறுப்பினர்கள் நடராஜன் மாரியப்பன் பொன்னு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கீழநம்பிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் வெள்ளைசாமி தலைமை தாங்கி னார். அம்மாபொன்னு, ராசம்மாள், ராமநாதன், விசாலாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.