தூத்துக்குடி, ஜூலை 1- ஈரான் நாட்டில் தவித்த 687 இந்திய மீனவர்கள் கடற்படை கப்பல் மூலம் புத னன்று தூத்துக்குடி வஉசி துறைமுகம் அழைத்து வரப்பட்டனர். ஈரான் நாட்டில் சிக்கி யுள்ள தமிழக மீனவர்கள் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஸ்வா மூலம் தூத்துக்குடி வஉசி துறை முகத்துக்கு புதனன்று காலை அழைத்து வரப் பட்டனர். இதில், தூத்துக் குடியைச் சேர்ந்த 33பேர், கன்னியாகுமரியைச் சேர்ந்த 514பேர், கேரளாவைச் சேர்ந்த 38பேர் என மொத்தம் 687 பேர் இன்று காலை தூத்துக் குடி வந்தடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துறைமுகசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதி காரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு உரிய பரிசோதனை கள் நடத்தப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.