தஞ்சாவூர், ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் ஆச்சாம் பட்டி, தக்காந்தெரு ஆகிய இடங்களில் புதிய கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு, ஆச்சாம்பட்டி கிளைச் செய லாளர் ஏ.சங்கிலிமுத்து, தக்காந்தெரு கிளைச் செயலாளர் பி.இளவரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.ரமேஷ், கே.தமிழரசன், எம்.ஜி.சர வணன், எம்.காமராஜ், எஸ்.சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினர். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் இ.முகமதுசுல்தான், கே.மருதமுத்து, கே.பழனிசாமி, எஸ்.மலர்கொடி, பி.சித்ரவேல், எல்.ராஜாங்கம், எஸ்.வியாகுலதாஸ், கே.ராஜ கோபால், எஸ். விஜயகுமார், என்.வசந்தா, வி.அஞ்சலிதேவி, வாலிபர் சங்கம் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக ஆச்சாம்பட்டி பி.முத்துக்குமார், தக்காந்தெரு பி.அர விந்த் நன்றி கூறினர்.