tamilnadu

போலீசாருக்கு கொரோனா  பாதுகாப்பு உபகரணங்கள்

தூத்துக்குடி,ஜூலை 14- ஸ்ரீவைகுண்டம் சரக போலீசாருக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சரகத்திற் குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், குரும்பூர், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட காவல் நிலை யங்களை சேர்ந்த போலீசார் அனைவருக்கும் கொரோ னா தாக்கம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்சிக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.