tamilnadu

கொரோனா நிவாரணம்  ரூ.50 லட்சம் கோரி போராட்டம்

தூத்துக்குடி, ஜூன் 13- கொரோனா விபத்து நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்கு டியில் வருவாய் அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு போ ராட்டம் நடத்தினர்.  திருச்சி மாவட்டம், தொட்டியம் உள்வட்டம், வருவாய் ஆய்வாளர் சேகர் என்பவர் கொரோனா தடுப்பு பணியின் போது  மரணமடைந்தார். அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படை யில் பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ கத்தில் பல்வேறு பகுதிகளில் வருவாய் துறையினர் வெள்ளி யன்று பெருந்திரள் முறையீடு நடத்தினர். இதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடியில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பெரு ந்திரள் முறையீடு போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.