தூத்துக்குடி, ஜூன் 3- பொற்கொல்லர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் பேரூராட்சியில் சுமார் 4000 பொற் கொல்லர்கள் (தங்கநகை செய்யும் தொழிலாளர்கள்) குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் 1000 பொற்கொல்லர்கள் தங்க ஆபரண நகைகள் செய்யும் தொழில் செய்து வந்தனர். தற்பொழுது தங்கம் விலை ஏற்றத்தின் காரணமாகவும், ஆபரண நகை செய்ய மிஷின் (இயந்திரங்கள்) புகுத்தப்பட்டுள்ளதால் தொழில் இன்றி பொற்கொல்லர்கள் கஷ்டப்பட்டு வரு கின்றனர். மேலும் கொரானா ஊர டங்கால் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வரும் அமைப்பு சாரா கட்டுமான உடல் உழைப்பு தொழில் நலவாரியத்தில் பதிவு செய்த பொற் கொல்லர்கள் கொரோனா நிவாரண நிதி கிடைக்காமல் அவதிபட்டு வரு கின்றனர்.
இதுபற்றி சாத்தான்குளத்தை சேர்ந்த பொற்கொல்லர்கள் முரு கேசன், பேச்சிமுத்து, கணேசன் உள் ளிட்டோர் கூறியதாவது: சாத்தான்குளம் நகரில் பரம்பரை பரம்பரையாக பொற்கொல்லர் களாகிய நாங்கள் ஆயிரம் பேர் தங்க நகை ஆபரணம் செய்யும் தொழில் செய்து வந்தோம். கலை நயமாக செய்யப்பட்ட தங்க நகை ஆபர ணங்களை சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்தி லுள்ள பெரும் நகரங்களிலும் பெங்க ளூர், திருவனந்தபுரம், மும்பை போன்ற வெளிமாநிலங்களிலும் உள்ள பெரிய நகை கடை அதிபர்கள் எங்க ளிடம் தங்கத்தை தந்து ஆர்டர் கொடுத்து தங்க நகை ஆபரணங்கள் செய்து வந்தோம். கலைநயத்துடன் கூடிய கல் பதித்த ஆபரண நகைகள், தங்க மாலைகள், தங்க மோதிரங்கள் போன்ற தங்க நகை ஆபரணங் களை ஆர்டர் எடுத்து செய்து கொடுத்து வந்தோம். சாத்தான்குளம் நகரில் எங்கள் கை வண்ணத்தில் செய்யப் பட்ட தங்க ஆபரணங்களுக்கு வெளி மாவட்டங்களிலும், வெளிமாநிலங்க ளிலும் நகை கடைகாரர்கள் வாங்கி சென்று வந்தனர்.
ஆனால் கடந்த ஒரு வருட காலமாக தங்க விலை ஏற்றத் தின் உயர்வாலும் மேலும் தங்க நகை கள் செய்ய இயந்திரங்கள் புகுத்தப் பட்டதாலும் எங்கள் தொழில் அடி யோடு நசுங்கி போய் விட்டது. தொழில் இன்றி எங்கள் குடும்பங் கள் வறுமையில் வாடி தவித்து வரு கின்றன. தொழில் நசுங்கி போன தால் எங்களை போன்று கலைநயத்து டன் செய்யும் தங்கநனை பொற்கொல் லர்கள் ஹோட்டல்களிலும், கட்டி டங்களுக்கு பெயின்ட் அடித்தும், கட்டி டம் கட்டும் வேலைக்கும் சென்று பிழைத்து வந்தோம். ஆனால் கொரோனா நோயால் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் இந்த தொழிலும் செய்ய முடியாமல் போய்விட்டது. தொழில் இன்றி என்ன செய்வது என தவித்து வருகிறோம். இந்த நிலை யில் எங்களுக்கு அமைப்பு சாரா கட்டு மான உடல் உழைப்பு தொழில் நலவாரி யத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து எங்களை போன்ற உறுப்பி னர்களுக்கு (பொற்கொல்லர்) தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி கொரோனா நிவாரண நிதியாக இரண்டு கட்டமாக ரூ.2000 வழங்க உத் தரவிட்டிருந்தார்.
ஆனால் தொழிலா ளர் நலதுறை சார்பில் சாத்தான்குளத் தில் ஒருசிலருக்கு மட்டுமே நிவாரண நிதி கிடைத்தது. எங்களை போன்ற பலதரப்பட்ட பொற்கொல்லர்களுக்கு கொரோனா நிவாரண நிதி கிடைக்க வில்லை. எனவே நிவாரண நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுகுறித்து சாத்தான் குளம் வட்டார ஸ்ரீவிஸ்வகர்மா பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் மூக் காண்டி அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார். அவரது மனுவில் கூறியி ருப்பதாவது: சாத்தான்குளம் நகரில் பாரம்பரிய மிக்க தங்கநகை செய்து வரும் பொற்கொல்லர்கள் வேலையின்றி அவதிப்பட்டுள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு உறுப்பினராக உள்ள இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கொரோனா நிவா ரண நிதி முழுமையாக கிடைக்கப் பெற வில்லை.
எனவே அரசு முழுமை யாக நிதி கிடைக்க உதவி செய்ய வேண்டும். மேலும் அடியோடு தங்க தொழில் நசுங்கி போனதால் தொழில் இழந்துள்ள பொற்கால்லர்களின் பட்ட படிப்பு முடித்த பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். எனவே இந்த இரண்டு கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 20 ஆம் தேதியன்று சாத்தான்குளம் நகரில் என்னுடைய தலைமையில் பொற் கொல்லர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திட முடிவெடுத்துள் ளோம் என மனுவில் தெரிவித்துள் ளார்.