தஞ்சாவூர், ஜன.22- தேசிய இறகுப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பட்டுக்கோட்டை பிருந்தா வன் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான இரட்டை யர் இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எஸ்.சிவபாலன், எம்.டி.சுகந்தன் ஆகியோர் பங் கேற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்திய மாணவர்கள் இருவருக்கும் செவ் வாய்க்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் டி. சுவாமிநாதன், செயலாளர் ஜெ.சரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு தங்கப் பதக் கம் அணிவித்து பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர்கள் சி. கோபாலகிருஷ்ணன், எம்.ராமையா,எம்.ரெத்தினகுமார், எஸ்.ராஜமாணிக்கம், சி. மோகன், டாக்டர்கள் கௌசல்யா ராம கிருஷ்ணன், கே.கண்ணன், கே.பிரசன்னா வெங்கடேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.முஹம்மது அக்பர் அலி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தா வன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, விளையாட்டு போட்டிகளி லும் பங்கேற்று சாதனை படைத்து வரு வது குறிப்பிடத்தக்கது.