tamilnadu

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, செப்.1- வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தூத் துக்குடியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், மக்கள் பிரச்சனைகளை திசை திருப்புவதாக கூறியும் தூத்துக்குடியில் வங்கி தொழிற்சங்க ஐக்கிய பேரவை சார்பில் கடற்கரைச் சாலையில் உள்ள கனரா வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பேரவையின் ஒருங்கி ணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலை மை வகித்தார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.ரசல் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு கிராம வங்கி சங்க மண்டலச் செயலர் தங்க மாரியப்பன், அகில இந்திய வங்கி ஊழி யர் சங்க தூத்துக்குடி கிளை நகரத் தலைவர் ராமசுப்பிரமணியன், செய லர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.