tamilnadu

மாலத்தீவில் இருந்து 700 பேர் இன்று தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி, ஜூன் 6 மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு கடற்படை கப்பலில் 700 இந்தியர்கள்  ஞாயிற்றுக்கிழமை வரு கின்றனர். இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலா ளர்கள், ஊரடங்கால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரு கின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மத்திய அரசு  ‘வந்தே பாரத்‘ இயக்கத் தை நடத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப் பட்டு வருகின்றனர். இதற்காக அந்த நாடுகளுக்கு விமா னங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.

“ஆபரேசன் சமுத்திர சேது” திட்டத்தின்கீழ் இந்திய  கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஜலஸ்வா மூலம் இந்தி யர்கள் மீட்கப்பட்டு வருகின்ற னர். அதன்படி, கடந்த 2  ஆம்தேதி இலங்கையில் இருந்து 713 இந்தியர்களுடன்  கடற்படை கப்பல் தூத்துக் குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. தற்போது 2-வது கட்டமாக மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக  மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படை கப்பலில் இந்தியர்கள் உரிய  பரிசோதனைக்கு பிறகு ஏற்றப் பட்டனர். இந்த கப்பல் வெள்ளியன்று இரவு மாலத் தீவில் உள்ள மாலி துறைமு கத்தில் இருந்து தூத்துக்கு டிக்கு புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை  10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை இந்த கப்பல் வந்தடைகிறது.