tamilnadu

வாலிபருக்கு மிரட்டல்: 3 பேர் கைது

தூத்துக்குடி, ஜூன் 15- தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்தவர் இஸ்ரவேல்(47). இவர் பூபாலராயர்புரம் ரோட்டில் பைக்கில் சென்ற போது 3 பேர் அவரை வழிமறித்து கத்தியினை காட்டி பணம் கேட்டு  மிரட்டினர். இதுகுறித்து அவர் வடபாகம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம்  வழக்குப்பதிந்து கந்தசாமிபுரத்தை சேர்ந்த முத்துமணி கண்டன்(24), நந்தகோபாலபுரத்தை சேர்ந்த ஆஸ்டின்சு ரேஷ்(26), சுந்தரராமபுரத்தை சேர்ந்த ஜெகன்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.