தூத்துக்குடி, ஜூன் 13- கோயம்புத்தூரில் நோயினால் உயிரிழந்த 65 வயது முதிய வர் சடலத்தை ஆம்புலன்சிலும், அவரது மகன்கள் 6 பேர் உள்பட 20 பேர் இரு வாகனங்களிலும் எவ்வித அனுமதியு மின்றி நாசரேத்தையடுத்த மூக்குப்பீறிக்கு வந்து கொண்டி ருந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எல்கையான தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடியில் வெள்ளியன்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வருவாய் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் வட்டாட்சிய ருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் மணி கண்டன் சடலத்தை கோவில்பட்டியில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய அறிவுறுத்தினார். இதை ஏற்றுக் கொள்ளாத அவரது உறவினர்கள் அதிகாரிகளிடம் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தினர். பின்னர் அதிகாரிகளின் கோ ரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர்கள், சடலத்தை கோவில்பட்டி மயானத்திற்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர் 20 பேரும் மீண்டும் கோயம்புத்தூருக்கு திரு ம்பினர். உடலை கோவில்பட்டியில் அடக்கம் செய்வது தொ டர்பாக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டி ருக்கும் போது உயிரிழந்த முதியவரின் உறவுக்கார பெண் ஒருவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனும திக்க கோரி காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.